‘பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற முறையில் வாழ்க்கை நடத்திய பாரிஸ்டர் பரிமேலழகரின் பழைய தோல் உரை! நட்பிலக்கணத்தைச் சோதிக்க கைதிக் கூண்டு ஏறிய ஒரு நாடறிந்த மோசக்காரன் தேடும் நற்சாட்சிப் பத்திரம்! நாடகக் கம்பெனியை விட்டு ஓடிவந்து ஆளுக்கொரு அவதாரமெடுத்து அலைபாயும் ஒருமலேயா நாட்டியக்காரியின் திருவிளையாடல் புராணம்! அழகான பெண்களைக் கண்டால் பல ஹீனத்திற்காளாகும் அபயரத்தினத்தின் காம தகனம்! பர்த்தாவின் பெயரறியாப் பத்தினியின் திருவாசகம்! வளர்த்த தந்தையின் முகமறியா வாலிபன் நடத்தும் துப்பறியும் படலம்! விசுவாமித்திரரிடமிருந்து வெளிப்பட்ட சினிமா உலக அப்சரஸின் கடைசிப் பாணம்! திரிகோண மலைப் பங்களாவில் திடீரெனத் தோன்றிய ஸ்ரீமதியின் மர்மம்! வளர்த்த பாசத்திற்கும் வாழ்விற்குமிடையே ஊசலாடும் காதலர்கள்! காணாமற்போன சவங்கள்!
-இத்தனைக்கும் பாழுங்கிணற்றின் பரம ரகசியத்திற்கும் என்ன சம்பந்தம்?
top of page
₹190.00Price