கல்யாணமாகாத கல்லூரி மாணவியான சாந்தி தன் படுக்கையறையில் தன்னந் தனியாகப் படுத்துறங்கும் நடுநிசி நேரத்திலே, அவளுடைய காதலன் சந்துரு எதைக் கண்டோ பயந்து பதறிக் கொண்டு ஓடிவந்து, அவளுடைய கைகளுக்குள்ளேயே சுருண்டு விழுகிறான். அவனுக்குச் சாந்தி தன் அறைக்குள்ளேயே அடைக்கலம் அளிக்கிறாள்.

ஆனால் வீட்டின் கீழ்த்தளத்தில் தூங்கும் தன் அக்காவும் அத்தானும் கண் விழித்து எழுந்து வந்து, தன் கட்டிலின் மீது சந்துரு படுத்திருப்பதைப் பார்க்க நேர்ந்தால் பெரிய ரகளை உண்டாகும்! தெருவெல்லாம் சிரிக்கும்! அது மட்டுமல்ல சந்துருவுக்காக ஓசைப்படாமல் சமையலறையிலிருந்து காபி பிளாஸ்க்கை எடுத்துக் கொண்டு இருட்டில் நடந்துவரும் போது, வலிமை பொருந்திய கரம் ஒன்று அவளை பின்னாலிருந்து சுற்றிவளைத்து இழுக்கிறது. விசித்திரமான காதல் வலையில் சிக்கிய அவள் கொலை வலையையும் கண்டு கதி கலங்கித் தத்தளிக்கிறாள்.

காதல் வலை

₹190.00Price